சோதனைகள் கோபி மற்றும் சுதாகரின் முதல் படம் கைவிடப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா.? இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்…

gopi-&-sudhakar
gopi-&-sudhakar

சினிமாவில் நடிக்கும் பல பிரபலங்கள் யூடியூப், டிக் டாக், என பல செயலிகள் மூலம் சினிமாவில் ஈசியாக நுழைந்து விடுகிறார்கள். அப்படி நுழைந்தும் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் எப்படியாவது தனக்கான அங்கீகாரத்தை பிடித்து சினிமாவில் நிலைத்து நின்று விடுகிறார்கள்.

இப்படி இருக்கும் காலகட்டத்தில் youtube மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிய இருவர் தற்போது சினிமாவில் நடிக்க களமிறங்கி விட்டனர். அவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்ப்பார்கலா? நிற்க மாட்டார்கலா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யூடியூபில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சேனலில் ஒன்றுதான் சோதனைகள். இந்த சோதனைகள் சேனலில் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்கள் என்று சொல்லலாம். பலர் கூறும் விஷயங்களை ட்ரோல் செய்தும் கமென்ட் செய்தும் பிரபலமான இவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் இவர்கள் இருவருமே இணைந்து நடிக்கிறார்கள் இந்த திரைப்படத்திற்கான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஆனால் இந்த திரைப்படம் அவர்களுக்கு இரண்டாவது திரைப்படம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சுதாகர் மற்றும் கோபி இருவருமே கூறியிருந்தனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட புகைபடமாக எடுக்கப்பட்டு இருந்ததாம் ஆனால் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார் அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு கூட நாங்கள் போகாமலே அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

கொரோனா ஆரம்பிக்கும் நேரத்தில் கோபி மற்றும் சுதாகர் ஆகிய இருவருமே ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தனர் ஆனால் கால் சீட் மட்டும்தான் இவர்களுக்கு கிடைத்தது படப்பிடிப்பு தொடங்கப்படாமல் நின்று விட்டதாக கூறியிருந்தனர். இதற்க்கு முக்கிய காரணம் கொரோனா லாக் டவுன்தான் என்று கூறபடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் இவருடைய இரண்டாவது படத்தில் தற்போது முழு கவனத்தை செலுத்தி வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.