‘தளபதி 68’ குறித்த அறிவிப்பா.? வெங்கட் பிரபுவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..

thalapathy 68
thalapathy 68

Thalapathy 68: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது தளபதி 68வது படம் குறித்து வெங்கட் பிரபு போட்டிருக்கும் பதிவு மீடியாவில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை விஜய் முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது மக்கள் இயக்கத் நிர்வாகிகள் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த நல உதவிகளை செய்து வருகிறார்.

லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்க அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் நிலையில் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற 2024ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, புதிய படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். எனவே தளபதி 68 குறித்த அறிவிப்பாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்த வருகின்றனர்.