12 நாட்களில் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்த.! புலம்பெயர் தொழிலாளருக்கு நடந்த சோகம்.!

தொழிலாளர்கள் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வெளி மாநிலங்கள், வெளியிடுடங்கள் என சென்று வேலை பார்த்து வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது பிற மாநிலங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வேலை இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வேலையில்லாமல் திண்டாடும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலரோ பைக் ,சைக்கிள் மற்றும் நடைபயணம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் சல்மான் கான் பெங்களூருவில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சரியான வேலை கிடைக்காமல் இருந்ததால் அவரது நண்பர்களுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளான் அங்கிருந்து டிரெயின், பஸ் எதுவும் சரியாக கிடைக்காததால் இவர் தனது நண்பர்களுடன் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் 12 நாட்களில் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை அடைந்துள்ளார் இவ்வழியில் செல்லும் பொழுது பல இன்னல்களும் சிக்கல்களையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து அவர் ஒரு வழியாக தனது கிராமத்தை வந்து அடைந்துள்ளார். அவரது தாய் வெகு நாட்கள் கழித்து தனது மகன் வர உள்ளதை முன்னிட்டு மிகுந்த சந்தோஷத்தில் இருந்துள்ளார் மகன் வந்தவுடன் அவளை கட்டித்தழுவி அரவணைத்து உள்ளார்.

சல்மான்கான் நான் வெகு தூரம் பயணித்து உள்ளேன் அம்மா கை ,கால்களை கழுவி விட்டு வருகிறேன் என்று கரும்பு தோட்டத்திற்கு சென்று உள்ளார் சென்றவர் வெகு நேரம் கழித்து திரும்பாததால் அம்மா சந்தேகப்பட்டு பின்னாடி போய் பார்த்துள்ளார்.அப்பொழுது சல்மான் கான் பாம்பு கடித்து இறந்து கடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கேயே மயங்கி உள்ளார் அவரது தாய்.

12 நாட்கள் 2000 கிலோ மீட்டரை கடந்து வந்த எனது மகன் வீட்டில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியாமல் போய்விட்டது என வயிற்றில் எடுத்துக்கொள்கிறார் அவரது தாய் மேலும் அவரது பையனின் இறுதி சடங்கிற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறார்.