Varalaxmi sarathkumar :தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி வரலட்சுமி சரத்குமார். இவர் முதலில் சிம்புவின் போடா போடி படத்தில் நடித்த அறிமுகமானார். அதன் பிறகு பெரிய படம் , சின்ன படம் என்று பார்க்காமல் நல்ல கதாபாத்திரங்கள் ஏதுவாக இருந்தாலும் துணிந்து நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விஜயின் சர்க்கார், சசிகுமாரின் தாரை தப்பட்டை, விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறியதால் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது.
அந்த வகையில் கன்னடம், தெலுங்கில், மலையாளம் போன்ற மொழிகளில் ஹீரோயினாகவும், வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 இல் மட்டுமே கைவசம் 17 படம் வைத்திருந்தார். அதில் குறைந்தது 10 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆன நிலையில் கைவசம் சபரி, லாகம், கலர்ஸ், பிறந்தநாள் பராசக்தி, பம்பன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் அவருடைய மார்க்கெட் வருகின்ற நாட்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த சூழலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். கேரளாவில் வழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் தொடர்புடையவர்களை NIA அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர் சமீபத்தில் நடிகை வரலட்சுமி என் உதவியாளராக இருந்த ஆதி லிங்கம் என்ற நபரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் வரலட்சுமி தொடர்பு இருக்கிறதா என்பதை பற்றி விசாரணை நடத்த தற்பொழுது வரலட்சுமிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆந்திராவில் தற்பொழுது ஷூட்டிங்கில் இருந்து வருகிறார் விரைவில் விசாரணைக்கு கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறி இருக்கிறாராம்.