ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் என்றும் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வந்த நடிகர்களில் முக்கியமான நடிகர்தான் ஜனகராஜ் இவர் 80ன்மற்றும் 90ன் காலத்தில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்து வந்தார் இவர் எல்லா முன்னணி நடிகர்களுடனும் திரைப்படத்தில் இணைந்து நடித்து பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபல மடைந்து விட்டார்.
அதிலும் குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவர் பேசும் ஆங்கில மொழி தான் ரசிகர்களை கவர்ந்து விட்டது இவர் ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் செட்டிலானார் என பல தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
மேலும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா 87 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் எந்த சமூக வலைதள பக்கங்களில் சிக்காமல் இருந்த இவர் திடீரென்று நேற்று அவரது 66வது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதை அவரே அதிகாரப்பூர்வமாக ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் எதற்காக திடீரென்று இப்படி இறங்கினார் என பல ரசிகர்கள் கேட்க தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனையும் இவரும் பார்ப்பதற்கு தான் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் என பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.
எனது பிறந்தநாளில் எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! pic.twitter.com/eWgB1it6b4
— Actor Janagaraj (@ActorJanagaraj) May 19, 2021
அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் நீங்கள் நடித்த திரைப்படங்களை எங்களால் தற்போதும் மறக்க முடியவில்லை என கூறி வருகிறார்கள்.