நமிதா மாரிமுத்துவை தொடர்ந்து பிக்பாஸ் 6 – ல் கலந்து கொள்ளும் திருநங்கை..? இதோ புகைப்படம்.!

bigboss

வெள்ளித்திரை போல சின்னத்திரையும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதுப்புது சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தி வருகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கு பெயர் போனது எப்பொழுது வேண்டுமானாலும் நேரம் காலம் பார்க்காமல்..  புது புது ஷோக்களை நடத்தி மக்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறுமா பெறாதா என்பது அவர்களுக்கே ஒரு கேள்விக்குறியாக தான் இருந்தது ஆனால் மக்கள் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதன் காரணமாக அதை சீசன் சீசன் ஆக நடத்தி வருகின்றனர.

இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்த நிலையில்.. 6 வது சீசனையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்தனர் ஒரு வழியாக வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. பிக்பாஸ் 6 வது சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் உலக நாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டும் கன்ஃபார்ம் இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் மட்டும் இணையதள பக்கத்தில் வைரல்லாகி வருகிறது அதாவது ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் தொடங்கும் போதும் புதுசாக எதையாவது  யோசிப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் திருநங்கை நமீதா மாரிமுத்துவை களம் இறக்கியது . அதேபோல இந்த தடவையும் புதிதாக யோசித்து உள்ளது பிக்பாஸ் 6 வது சீசனில்  திருநங்கை ஷிவின் கணேசன் என்பவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அவரின் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. உறுதியாக அறிவிக்கவில்லை..