விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் தற்பொழுது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்தப் படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பிறகு ஏராளமான சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் கவின்.
இதனை அடுத்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் டாடா திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடித்துள்ளார் மிகவும் ஜாலியாக ஒரே வீட்டில் இருந்து வரும் இவர்கள் ஒரு கட்டத்தில் அபர்ணா தாஸ் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விடுகிறார் அதன் பிறகு ஏற்படும் குழப்பங்கள் திருப்பங்கள் தான் இந்த படத்தின் முழு கதை. மேலும் இதில் கவின் பிளேபாய் ரோலில் நடித்துள்ளார் என்பதும் இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.
காதல் மட்டுமல்லாமல் கவின் மற்றும் அமர்னா தாஸ் இருவரும் செண்டிமெண்டிலும் கலக்கி உள்ளனர் மேலும் இவர்களை அடுத்து பாக்கிய ராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தினை கணேஷ் பாபு இயக்க ஜென்மார்ட்டின் இசையமைப்பில் எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஸ் அழகேசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் இந்த படத்தினை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கவின் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்புனை பெற்ற நிலையில் டாடா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.