தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நானி நடிப்பில் தற்போது தசரா படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரான நானி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வெற்றினை கண்டு வருகிறது.
அந்த வகையில் கடைசியாக சுந்தராணிகி படம் வெற்றினைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் தசரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்க இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் நடிகைகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தசரா படம் இன்று மாலை 4:59 மணி அளவில் பட குழுவினர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள்.