வாழ்க்கையின் ஆழம் தெரியாத ஒரு சிறு வண்டு.! அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூன்று நிறங்கள்’ பட டிரைலர்.!

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அதர்வா முரளி. தற்பொழுது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படத்தில் அதர்வா முரளி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், ரகுமான், ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார் மேலும் சுஜித் சாரங்கின் உதவியாளர் டியோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இவ்வாறு இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நிறைவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியிருக்கும் நிலையில் இதனை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இருவரும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

ட்ரைலரின் ஆரம்பத்தில் அதர்வா முரளி சிகரெட் அடிப்பது போன்ற காட்சிகளும் , அவர் கதையை கூறுவது போலவும் அமைந்திருக்கிறது. இவ்வாறு இந்த படத்தில் காமெடியும் கலந்திருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருக்கிறது. இதோ முன்று நிறங்கள் படத்தின் டிரைலர்..