Actor Benjamin : சினிமா உலகில் நடிக்கும் அனைவருக்கும் நல்லா இருக்கிறார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் ஆகியவர்கள் தான் நல்ல சம்பளம் வாங்கி செட்டில் ஆகின்றனர் மற்றபடி குணசத்திர நடிகர்கள், காமெடி நடிகர்கள் போன்றவர்கள் இன்றும் ஒரு நல்ல நிலைமைக்கு வரமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் காமெடி நடிகர் பெஞ்சமின். இவர் வெற்றி கொடிகட்டு படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் பகவதி, விக்ரமின் சாமி, கமலின் அன்பே சிவம், அஜித்தின் திருப்பதி, சரத்குமாரின் ஐயா என பல டாப் நடிகரின் படங்கள் நடித்து படிப்படியாக உயர்ந்தார்.
தற்பொழுது மெய்ப்பட செய் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படி திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கும் பெஞ்சமின் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது தான் சந்தித்த அவமானங்கள் குறித்து பேசி உள்ளார்.. நான் வளராத காலத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு சாப்பிடுவதற்கு தட்டு எடுத்துக்கொண்டு போய் சாப்பாடு வாங்கி பிசைஞ்சு வாயில வைக்க போகும் தட்ட புடிங்கிடு வீசிடுவாங்க..
என்ன சாப்பிட வந்துட்ட கேட்டாங்க.. நான் படத்துல ஒரு சீன்ல நடிச்சிருக்கேன்னு சொல்லுவேன் நீ நடிச்சா உனக்கு சாப்பாடு போடணுமா உங்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கணும்னு கம்பெனில சொல்லல.. இன்னைக்கு 20 பேருக்கு தான் சாப்பாடு வெளியே போடா சொல்லுவாங்க..
சாப்பாடு வேஸ்டா போது நான் சாப்பிட்டு போறேன் என சொல்லுவேன் காலால எட்டி உதைப்பான் அங்கே இருக்கிற பொம்பளைகளை கூப்பிட்டு தட்ட எடுத்துட்டு போய் கழுவ சொல்லுவாங்க.. இதை பார்க்கும் போது சாப்பிட கூட முடியல என தோணும். மனுஷன் கஷ்டப்படுறது எதுக்கு ஒரு ஜான் வைத்துக்கு தான்.. சாப்பாடு கொடுத்த என்ன தப்பு என கூறினார்.