Surya : சினிமா உலகில் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் நடிகர் சூர்யா. இவர் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் படி சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து “கங்குவா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலேயும் அவர் நடிக்க திட்டம் போட்டு இருக்கிறார். இப்படி வெற்றி நடிகராக ஓடும் இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவ, மனைவிகளை படிக்க வைக்கும் வருகிறார்.
மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இப்படிப்பட்ட சூர்யாவுக்கு இன்று 48 வது பிறந்தநாள். இதனை அறிந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கங்குவா படக்குழு படத்திலிருந்து glimpse வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.
ஒரு சில ரசிகர்கள் ஒரு படி முன்னேறி ரத்ததானம், அன்னதானம் மற்றும் பல பரிசு பொருட்களை குழந்தைகளுக்கும், மக்களுக்கும் கொடுத்து அழகு பார்த்தனர். ஒரு சிலர் கட்டவுட் வைத்து அழகு வருகின்றனர் அப்படி நடிகர் சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திராவின் பால்நாடு பகுதியில் Narasaraopet என்ற இடத்தில் சூர்யா ரசிகர்கள் பெரிய கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர்.
அந்த கட்டவுட்டின் இரும்பு ஃப்ரேமில் மின்சார கம்பி உரசியது. மின்சாரம் தாக்கியதில் இரண்டு சூர்யா ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர் அவர்கள் தற்பொழுது இரண்டாவது ஆண்டு கல்லூரி படித்து வரும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.