நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர காத்திருக்கிறது. மேலும் வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தது அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வாரிசு பவுன்சர்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் இசை வெளியீட்டு விழாவில் நடந்ததை கூறியுள்ளனர்.
அதாவது அவர்கள் கூறியது என்னவென்றால் முதலில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக கூறியுள்ளார்கள் அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் போட்டு இருந்தோம். அதன்படி நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பவுன்சர்ஸ் உணவுக்காக சென்ற போது வெளியே இருந்த ரசிகர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டார்கள்.
அதன் பிறகு ரசிகர்கள் கேட்டை உடைத்தது தெரிந்த உடனே சாப்பிடும் இடத்தை விட்டு விரைந்து வந்து பார்க்கும்போது அனைத்து ரசிகர்களும் ஸ்டேடியத்தின் உள்ளே நுழைய பார்த்தார்கள் அதற்குள் பவுன்சர் எல்லாம் ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்று அவர்களை எங்களால் முடிந்தவரை கட்டுப்படுத்தியிருந்தோம். அதில் பலர் மது அருந்திவிட்டு கூட வந்திருந்தார்கள் அதனால் எங்களால் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை ஒரு சமயத்தில் இரண்டு பவுன்சர்களை கீழே தள்ளிவிட்டு உள்லே நுழைந்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் பப்ளிசிட்டிக்காக பவுன்சர்ஸ் போல் உடைய அணிந்து கொண்டு விஜய்யிடம் சென்று போட்டோ எடுத்துக்கொண்டு ஒரு பேட்டியிலும் நான் தளபதி கூட போட்டோ எடுத்துக் கொண்டேன் என்றும் பவுன்சர் போல உடை அணிந்து நான் அவர்களை ஏமாற்றி விட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த பவுன்சர்ஸ் இவங்கள மாதிரி ஒரு சில ரசிகர்களால் தான் பவுன்சரின் நிலைத் தலைகிழாக மாறுகிறது அது மட்டுமல்லாமல் எங்களுடைய கஷ்டம் ரசிகர்களிடம் அடி வாங்குவதும் யாருக்கும் தெரியாது ஆனால் பவுன்சரை பார்த்தால் அடிக்க வராங்க போறாங்க என்று கூறி பிரபலமாகி விடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த ரசிகர் செய்த செயலை தளபதி விஜய் கூட ஏற்க மாட்டார் என்று கூறியுள்ளார். இதனால் பவுன்சர்ஸ் பலரிடம் திட்டு வாங்கியதாகவும் நீங்க எல்லாம் எதுக்கு வரீங்க நீங்க எல்லாம் எதுக்கு பவுன்சரா இருக்கீங்க என்று கூட எங்களை திட்டினார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படியாவது நல்லபடியாக இந்த நிகழ்ச்சியை முடிச்சி கொடுத்தால் போதும் என்று இருந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இது போன்ற விஷயங்கள் நடந்து முடிந்து விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது நேரு ஸ்டேடியத்தில் இருக்கைகள் உட்பட பலவிதமான பொருட்கள் சேதம் அடைந்தது குறித்து பவுன்சர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு விளக்கம் அளித்த பவுன்சர்கள் கண்ணாடி கதவு உட்பட இருக்கைகள் வரை பல பொருட்கள் சேதம் அடைந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.