ஆரம்பத்தில் காதல் மன்னனாக ஓடிய அஜித் அமர்களம் திரைப்படத்திற்கு பிறகு முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். அன்றிலிருந்து இப்பொழுது வரை பெரிதும் ஆக்சன் படங்களை கொடுத்து ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். அஜித் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கூட முழுக்க முழுக்க மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக தான் வெளிவந்தது.
அதனைத் தொடர்ந்து அஜித் தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறதாம். படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார் போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் செம மாஸ் ஆக நடித்துள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன.
அவருடன் இணைந்து சமுத்திரக்கனி, மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, அஜய், மகாநதி சங்கர், ஜான் கொக்கன், யோகி பாபு மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்திழுக்க பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்ட நிலையில் இன்றும் துணிவு படத்திலிருந்து மூன்றாவது சிங்கிளான கேங்ஸ்டர் டா என்ற பாடல் வெளியாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. இது ஒரு உறுதியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.