லியோ படத்தின் மொத்த ரன்னிங் டைம்.? இவ்வளவு நேரம் ரசிகர்கள் உட்காருவார்களா

Leo
Leo

Leo Movie Running Time : லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே போதை பொருளை மையமாக வைத்து தான் இருக்கும் அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து இவர் எடுத்துள்ள லியோ படமும் சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து தான்..

கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் என பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து இருப்பதால் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர்களின் GLIMPSE வீடியோ வெளிவந்து வைரலானதை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறது. படம் தமிழை தாண்டி பல்வேறு மொழிகளில் வெளியாகிறது அதனால் ஒவ்வொரு மொழிக்கான போஸ்டரை வெளியிட்டு வருகிறது கடைசியாக விஜய் சஞ்சய் தத்தை அடிப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டது அது பெரிய அளவில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்டையும் லியோ டீம் கொடுத்துள்ளது ஆம் லியோ படத்தின் மொத்த ரன்னிங் டைம் தகவல் வெளியாகி உள்ளது படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

Vijay
Vijay

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் படத்தில் பல நடிகர் நடிகைகள் இருப்பதால் படத்தின் நீளம் அதிகரித்து உள்ளதா என கேள்வி எழுப்புகின்றனர்.  ஆனால் ஒரு சிலர்  படம் ஹிட் அடிப்பது உறுதி ஏன் என்றால் இதற்கு முன்பு கமலின் விக்ரம் திரைப்படத்தை இரண்டு மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும்  படத்தில் ஒரு சலிப்பையும் கொடுக்கவில்லை எனவே லியோ படத்திலும் அதை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.