Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஜெயில் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றிக்கான முடிந்த நிலையில் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது தமன்னா கிளாமர் ஆட்டம் போட்டா காவலா பாடல் பெரிய பேசப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து டைகர் ஹுக்கும் பாடலின் வசனங்கள் சூப்பராக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் வைரலானாகின.
அடுத்ததாக ஜெயிலர் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை எதிர் நோக்கி காத்து இருகின்றனர். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு என தெரியவந்துள்ளது ஜெயிலர் படத்தின் மொத்த நீளம் சுமார் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும் என்றும், அதில் முதல் பாதி 1மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாவது பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக கூறுகின்றனர். ஜெயிலர் படத்தில் பல டாப் ஹீரோக்கள் இருப்பதால் அவருடைய இண்ட்ரொடக்ஷன், சில மாஸ் காட்சிகள் காட்ட வேறு வழி இல்லாமல் படத்தை இழுத்து உள்ளனர் என கூறிய கமாண்ட் அடித்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்ப்போம் நெல்சன் ஜெயிலர் படத்தை எப்படி எடுத்துள்ளார் என்று.