நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61-வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இதில் நடிகர் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி, போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு 12ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
அதற்கு முன்பாகவே ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள படக்குழு தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது கடைசியாக வெளிவந்த சில்லா சில்லா பாடல் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை தல ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் கசிந்து இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அதாவது துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு எப்பொழுது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த தான் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஆனால் வெளிநாடுகளில் முன்கூட்டியே ரிலீசாகிறது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இடங்களில் 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். மேலும் துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என சொல்லப்பட்டுள்ளது இந்த செய்தியை தற்பொழுது அஜித் ரசிகர்கள் வேற லெவெலில் கொண்டாடி வருகின்றனர்.