சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படையெடுக்கும் நடிகர் நடிகைகள் ஏராளம் ஆனால் ஒரு சிலர் மட்டுமே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர் அந்த வகையில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் காமெடியனாகவும்..
ஜொலித்து வந்த இவர் வெள்ளி திரையில் மெரினா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினி முருகன், காக்கிச்சட்டை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டான், டாக்டர் போன்ற படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டு சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன அது குறித்து விலா வாரியாக பார்ப்போம்.. நடிகர் சிவகார்த்திகேயன் பிரம்மாண்டமான வீடு, பிரம்மாண்ட சொகுசு கார்கள் என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்
நடிகர் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது சினிமா உலகில் வந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு காசு சேர்த்து உள்ளார் என்பது மிகப்பெரிய ஒரு விஷயம் எனக் கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. கோலிவுட் வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.