நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமா உலகில் இப்பொழுது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார் ஆனால் 1990 – 2000 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் இப்படத்தை பிடித்தவர். முதலில் இவர் வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் திருடா திருடி, கிழக்கே வரும் பாட்டு, கல்லூரி வாசல் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் 1998 ஜீன்ஸ் இவருக்கு மிகவும் ஒரு திருப்புமுனை படமாக இருந்தது அதன்பின் நடிகர் பிரசாந்த் தேர்ந்தெடுத்து நடித்தார் திரைப்படங்களான ஜோடி, ஸ்டார், சாக்லேட், மஜுனு, தமிழ், குட்லக் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறின.
இதனால் அப்போது அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக் கொண்டிருந்த இவர் காலப்போக்கில் இவரது திரைப்படங்கள் பெரும் தோல்வியடைந்தது மற்றும் பிரசாந்தும் உடல் எடையை ஏற்றிய ஆளே மாறிப் போனார்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது அதிலிருந்து மீண்டுவர நடிகர் பிரசாந்த் என்னென்னமோ செய்து பார்த்தாலும் வாய்ப்புகள் மட்டும் சுத்தமாக கிடைக்கவில்லை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அப்பா இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் இந்த படம் ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவரது சினிமா பயணம் மெல்ல மெல்ல உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரசாந்த் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 85 கோடி இருக்கும் என தெரிய வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் துறை வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.