தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட ரஜினி.! ஒரேடியாக படுத்த ஜெயிலர் வசூல்… தலையில் அடித்துக் கொள்ளும் கலாநிதி மாறன்..

jailer
jailer

Jailer Box Office: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் தகவலின்படி  முதல் வாரம் மட்டுமே நல்ல வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விடுமுறை நாட்களுடன் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியினை கண்ட ஜெயிலர் இரண்டாவது வாரத்தின் வசூல் மிகவும் மோசமாக இருக்கிறதாம். அப்படி இரண்டாவது வார இறுதியில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று வெளியான நிலையில் ஃப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்தது.

அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்ட நிலையில் அமெரிக்காவில் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் ஜெயிலருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படி வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ஜெயிலர் ரூ.300 கோடி கடந்து சாதனை படைத்தது.

எனவே கண்டிப்பாக 800 கோடியை வசூல் செய்து சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். அப்படி முதல் வார இறுதியில் 500 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது ஆனால் சன் பிரிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில் முதல் வாரம் 375 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஜெயிலர் மொத்தம் 18 கோடி ரூபாய் தான் வசூல் செய்ததாம். அதற்கு முன்பு சனிக்கிழமை 20 கோடி கோடி ரூபாயும் மொத்தம் 11 நாட்களில் 470 கோடி ரூபாய் மட்டுமே ஜெயிலர் வசூல் செய்துள்ளது. இவ்வாறு முதல் வாரத்தை விட அதன் பிறகு வசூல் குறைந்து விட்டதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் 250 கோடி முதல் 290 கோடி ரூபாயும் கலெக்ஷன் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் அமெரிக்காவில் ஜெயிலர் படம் 5 மில்லியன் டாலர் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.