Atlee four movie collection : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் எடுத்த நான்கு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழில் அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷாருக்கான் உடன் கைகோர்த்து ஜவான் படத்தை எடுத்தார் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி..
நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர் படம் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாது என கூறப்படுகிறது ஆதனால் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அட்லீ இயக்கிய நான்கு திரைப்படங்களின் வசூல் பற்றி பார்ப்போம்..
ராஜா ராணி : ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் காதல், சென்டிமென்ட் கலந்திருந்தாலும் அதே சமயம் காமெடிக்கும் பஞ்சமில்லை சந்தானம் பின்னி படலெடுத்தார். படம் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
தெறி : விஜயுடன் முதல்முறையாக கைகோர்த்து இந்த படத்தை எடுத்தார். படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அதேசமயம் தனது மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் நடித்து இருந்தார். படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது இதனால் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
மெர்சல் : இந்த படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதிலும் பிளாஷ் பேக் காட்சியில் வரும் விஜய் செம்ம மாஸாக நடித்திருப்பார். அதேசமயம் எமோஷனலும் சிறப்பாக இருந்ததால் பார்த்த அனைவரும் கண் கலங்கினர். இதனால் அதிக நாட்கள் ஓடி 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
பிகில் : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவானது படத்தில் ஆக்சன், எமோஷனல் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகண்டது,
இதனை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்துள்ளார் இந்த படம் வெளிவந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது நிச்சயம் 1000 கோடி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.