சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரையு உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை அதை உணர்ந்து கொண்ட ரஜினி அடுத்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இதனால் தனது 169 வது திரைப்படமான சூப்பர் ஹிட் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி இயக்குனருடன் கலந்து பேசி கதை விவாதத்தில் ஏற்கனவே ஈடுபட்டு ஒரு வழியாக முடித்துள்ளார். இயக்குனர் நெல்சன்னும் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் மோசமான விமர்சனத்தை பெற்றதால் அதிலிருந்து மீண்டு வர ரஜினியின் ஜெயிலர் படத்தை வேற லெவலில் செதுக்கி உள்ளார் என பலரும் கூறுகின்றனர்.
அதனால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் தயாரிக்கிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற 15 அல்லது 22 ஆகிய தேதிகளில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் கைகோர்த்து கன்னட டாப் நடிகர் சிவ ராஜ்குமார், ராங்கி பட ஹீரோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹீரோயின்கள் இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
மற்றும் இதில் நடிக்கும் குணத்திரா நடிகை நடிகர்களை கூட சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க படப்புழு திட்டம் போட்டு உள்ளதாம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படமாக எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ரஜினி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.