முதல் மூன்று இடத்தை பிடித்த “குக் வித் கோமாளி” போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா.?

cook-with-komali
cook-with-komali

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு காமெடி நிகழ்ச்சியும் மக்கள் பலருக்கும் பிடித்து போய் மகிழ்வித்து பார்த்து வருகின்றனர். அப்படி பிரபல காமெடி நிகழ்ச்சியாக தொடர்ந்து சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சிக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி பலரின் கவலை போக்கி ட்ரெஸ் பஸ்ஸர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இதில் போட்டியாளராக ரோஷினி ஹரிப்ரியன், அம்மு அபிராமி, ஸ்ருதிகா, சந்தோஷ், கிரேஸ் கருணாஸ், தர்ஷன் போன்ற 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துள்ளது. இதில் சென்ற வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெற்றது. அதில் இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியேறிய பல போட்டியாளர்கள் பங்கு பெற்று போட்டியில் சிறப்பாக சமையல் செய்து தர்ஷன் மற்றும் கிரேஸ் கருணாஸ் இருவரும் பைனலுக்கு சென்றுள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 3 கிராண்ட் பின்னாலே எபிசோடு நிகழ்ச்சியும்  எடுக்கப்பட்டுள்ளது.

அதனை சிவாங்கி கூட அவரது சமூக வலைதள பக்கங்களில் பைனல் நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ள  இந்த பைனல் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா, தர்ஷன், கிரேஷ் கருணாஸ், அம்மு அபிராமி, வித்யூலேகா போன்ற பைனலிஸ்ட் இருந்து வருகின்ற நிலையில் முதல் மூன்று இடத்தை எந்த போட்டியாளர்கள்..

தட்டிச் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் முதல் இடத்தை ஸ்ருதிகாவும், இரண்டாவது இடத்தை தர்ஷன் மற்றும் மூன்றாவது இடம் அம்மு அபிராமி பிடித்துள்ளனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வெளியாகி பரவி வருகின்றன.