டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் டாப் சீரியல்கள்.!

tamil-serial
tamil-serial

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என கொடுத்து மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறது. அதில் ஒரு சில முக்கிய சீரியல்கள் மட்டும் மக்கள் பலரும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக அமைகின்றன.

அப்படி மக்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வரும் சீரியல் எவை என்பதை நாம் ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் அதிகம் ஃபேமஸாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கல் எவை என்பதை பற்றி பார்ப்போம்.

கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இதில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த தொடர் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை டி ஆர் பி யில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யலட்சுமி தொடர் : இந்த சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இதில் தற்போது கதையில் முக்கிய திருப்பங்களுடன் சென்றுகொண்டு இருக்கிறது இதனால் தொடர்ந்து சில வாரங்களாக டிஆர்பி யில் முதலிடத்தில் வகித்து வருகிறது பாக்கியலட்சுமி.

வானத்தைப் போல :  இது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடராகும் அண்ணன் தங்கை பாசம் போன்றவற்றை மையமாக வைத்து எடுத்து வருகிறது இதுவும் டிஆர்பியில் டாப் ஐந்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி கண்ணம்மா சீரியல் : இது விஜய் தொலைக்காட்சியில் படும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒரே கதையை சுற்றி சுற்றி எடுத்து வருகின்ற நிலையிலும் டிஆர்பி யில் டாப்பில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரி சீரியல் இது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடராகும் இதில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் அழகு இல்லை என்பதால் அவரது கணவர் வெறுத்து ஒதுக்குகிறார்.

அதையெல்லாம் முறியடித்து தனது லட்சியத்தில் சாதிக்க வேண்டும் என்பதில் மும்பரமாக இருந்து வருகிறார் இந்த தொடரும் தொடர்ந்து டி ஆர் பி யில் டாப் 5 இல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.