தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகின்றன ஆனால் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் மிகப் பிரம்மாண்டமான வசூலை அள்ள தவறி விடுகிறது ஆனால் ஒரு சில படங்கள் அதை நிகழ்த்துகின்றன.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி கமல் அஜீத் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் படங்கள் அசால்டாக 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
பிற மொழிப் படங்களும் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை அண்மை காலமாக பெற்று வருகின்றன அந்த வகையில் கன்னட சினிமாவில் உருவான கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் அள்ளி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து வெளிவந்த எந்த ஒரு பிற மொழி படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது இல்லை.
தமிழ் சினிமாவில் வெளியான டாப் ஹீரோக்களின் படங்கள் அதிகம் வசூல் செய்துள்ளன அந்த வகையில் 1. அஜித்தின் வலிமை, 2. கமலின் விக்ரம், 3. விஜய்யின் பீஸ்ட் 4. சிவகார்த்திகேயனின் டான் ஆகிய திரைப்படங்கள் 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் ஆக பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக நான்கு வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தற்போது தமிழகத்தில் மட்டுமே மிக பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளி வருகிறது வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே தமிழகத்தில் 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக விக்ரம்படம் மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன.