தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் அண்மை காலமாக வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கின்றன. மேலும் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.
அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் படத்தின் கதையை ஏற்கனவே கேட்டுவிட்டால் நடிகர் அஜித்குமார் அதற்கு ஏற்றவாறு அதிரடியாக உடல் எடையைக் குறைத்து தற்பொழுது தயாராக இருக்கிறார்.
இயக்குனர் ஹச். வினோத் மீண்டும் அஜித்தை வைத்து திரைப்படத்தை எடுக்க போவதால் அதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறார்.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார் அதற்கான வேலைகளையும் அவர் முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது படக்குழு இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 6 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் நகரும் என தெரியவருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் தெரிவித்தன அதன்படி இந்த படத்தில் மோகன்லால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்..
அஜித் வில்லன் ரோலில் மிரட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் தெலுங்கு டாப் நடிகரான நாகார்ஜுனா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை என்னும் படத்தில் அஜித் வில்லனாகவும், மோகன்லால் – நாகார்ஜுனா போலீசாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.