“டாக்டர்” படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவத்தை கண்டு அதிர்ச்சியான டாப் ஹீரோக்கள்.! என்னது இத்தனை கோடியா.?

doctor
doctor

கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் நெல்சன் திலிப்குமார் முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இரண்டாவது படம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயனும் இணைந்தார்.

மூன்றாவதாக தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி எடுத்த உடனேயே வெற்றி மேல் வெற்றி கண்டு வருவதால் இவரது படத்தை பார்க்க மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் “டாக்டர்”.

திரையரங்குகள் 50% இருக்கையுடன் திறக்கப்பட்டு இருந்தாலும் முதல்நாளே நல்லதொரு விமர்சனத்தையும் வசூலையும் பெற்று மக்கள் கூட்டத்தை அலை போல தட்டி தூக்கி வருகிறது. இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் 6.40 கோடியை அள்ளியது. மேலும் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலை வருவதால் அடுத்தடுத்த நாட்களிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என முதல்நாளே கணிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு ஏற்றார்போல இரண்டாவது நாளிலும் தற்போது டாக்டர் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் மட்டும் இரண்டாவது நாளே டாக்டர் திரைப்படம் சுமார் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் திரைப்படம் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்த நிலையில் பல OTT நிறுவனங்கள் இந்த திரைப் படத்தை கைப்பற்ற போட்டிக் கொண்டன ஆனால் படக்குழு நாங்கள் திரையரங்கில் வெளியிட்டு மக்களை மகிழ்விப்போம் என ஒத்த காலில் நின்றது.

அதற்கு ஏற்றார்போல திரையரங்கில் வெளியிட்டு மக்கள் கூட்டத்தை அதிகமாக கவர்ந்து வருகிறது. படம் முடிந்து மக்கள் செல்லும் பொழுது சிரிப்பை அடக்க முடியாமல் இருகின்றனர். இதனால் டாக்டர்  குழுவினரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது