தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி இன்றும் சிறப்பம்சம் உள்ள படங்களை அடுத்தடுத்து கைப்பற்றி நடிப்பதால் அவருக்கு ஈடு இணை இன்றளவும் எந்த ஒரு நடிகரும் சினிமா உலகில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
திரை உலகில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரது படங்கள் ஒவ்வொன்றும் வசூலில் வாரிக் குவிக்கின்றன அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க ரஜினியுடன் எப்படியாவது படத்தில் நடித்துவிட வேண்டும் என பல நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசை கட்டி நிற்பது வழக்கம் ஆனால் ஒரு சில பிரபலங்கள் ரஜினியின் படமாக இருந்தாலும் கதை களத்தை நன்கறிந்து விட்டு அதன் பிறகு நடிப்பது வழக்கம் கதைகளும் சரியில்லை என்றால் அதை வீசி எறிவார்கள் அப்படித்தான் ரஜினியின் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்து பின் அதிலிருந்து விலகி உள்ளார் பிரபல நடிகர் சத்தியராஜ்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு உருவான சிவாஜி திரைப்படத்தில் ஆதிசேஷன் என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சத்யராஜ் தான் ஆனால் அவர் அதில் நடிக்காமல் போனதற்குப் பிறகு நடிகர் சுமன் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்தார்.
அதேபோல் மீண்டும் ரஜினி ஷங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் டாக்டர் போஹ்ரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இயக்குனர் அணுகியது என்னமோ சத்யராஜ் தானாம்.