தலைவரின் 169 வது படத்தை எதிர்த்து மோதும் டாப் ஹீரோ – வெற்றி யார் பக்கம்.?

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் உடன் கைகோர்த்து தனது 169 வது படத்தில் நடிக்க போகிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை எடுக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தெரிய வருகிறது அதற்கு முன்பாக நெல்சன் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் 169 வது திரைப்படம்  அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்களில் சோலோவாக களம் காண்பது வழக்கம் ஆனால் அடுத்த பொங்கலுக்கு மிகப்பெரிய இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் மோத உள்ளனர் என்ற தகவல் கிடைத்து உள்ளது அதாவது ரஜினியின் 169 வது திரைப்படத்தை எதிர்த்து தளபதி விஜய்யின் 66 வது திரைப்படம் மோதும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 66 வது திரைப்படத்தை வம்சி இயக்குகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறிவிட்டது இதனை வைத்து பார்க்கையில் ரஜினி, விஜய் படங்கள் மீண்டும் ஒருமுறை மோத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யார் கை ஓங்கி இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

சொல்லப்போனால் அதிகபட்சமாக ரஜினிக்கு தான் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் ரஜினிக்கு தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அவரது படங்கள் அசால்டாக 300 கோடியை அள்ளுகின்றன அதனால் இந்த ரேஸில் ரஜினி மாஸ் காட்டுவார் என கூறப்படுகிறது ஆனால் அதே அளவிற்கு விஜய்க்கும் நல்ல மார்க்கெட் இருப்பதால் ஒரு ஆரோக்கியமான போட்டி ஆகவே பார்க்க படுகிறது.