சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தை எதிர்த்து மோதும் டாப் ஹீரோ படம்.? யார் கை ஓங்கும்.

simbu
simbu

கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பின் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் வெளியாகின அதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது தொடர்ந்து பல்வேறு நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் சோலோவாக களமிறங்கியுள்ளன. இப்படி  இருக்கின்ற நிலையில் ஒரு சில டாப் நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பாராதவிதமாக ஒரே நேரத்தில் மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம்.

எப்பொழுது வெளியாக வேண்டிய திரைப்படம் தான் ஆனால் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வந்தது. ஒருவழியாக இப்பொழுது இறுதியாக தேதியை லாக் செய்து விட்டது ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி படம் வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

இந்த திரைப்படமும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியிடப் போவதாக சொல்லி உள்ளது. அப்படிப்பார்த்தால் விக்ரமின் கோப்ரா, சிம்புவின் வெந்து தனிந்தது காடு ஆகிய இரு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோத உள்ளது இந்த இரண்டு திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று தான் வெற்றி பெறப் போகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

cobra-and-vendhu-thaniththu-kaadu-
cobra-and-vendhu-thaniththu-kaadu-

இந்த ரேசில் யார் கை ஓங்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் இருவருமே நடிப்பில் பின்னி பெடல் எடுக்க கூடியவர்கள் மேலும் இருவரும் வெவ்வேறு விதமான வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளதால் இந்த ரேசில் வெற்றி பெறுவது யார் என்று தெரியாமல் ரசிகர்களில் தவித்து வருகின்றனர்.