தீபாவளி ரேஸில் “சர்தார்” படத்தை எதிர்த்து மோத ரெடியான டாப் ஹீரோ படம்.! ஆச்சரியத்தில் AK 61.?

sardar

தமிழ் சினிமா உலகில் அண்மைகாலமாக இளம் நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து வண்ணமே இருக்கின்றன இப்படி இருந்தாலும் முக்கிய நாட்களில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வந்தால் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் ரசிகர்கள் தற்போது தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர  இருக்கிறது என அதிரடியாக கூறி விட்டது ஆனால் பல்வேறு திரைப்படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் கார்த்தியுடன் எந்த திரைப்படம் போதும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில் தற்போது போட்டி போட ரெடி ஆகி உள்ளார் ஜெயம் ரவி பல நாள் கிடப்பில் கிடந்த இறைவன் திரைப்படம் ஒரு வழியாக படப்பிடிப்பு அனைத்தும் முடிக்கப்பட்டு தற்போது தீபாவளி ரேசில் நாங்களும் கலந்து கொள்கிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தீபாவளி ரேஸில் கார்த்தியின் சர்தார் ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோதுவது உறுதி. டைரக்டர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு தடைகளை சந்தித்ததால் படம் பாதியில் போட்டு பின் சைலண்டாக படத்தை எடுத்து அசத்தி உள்ளது.

jeyam
jeyam

இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஜெயம் ரவி இந்த படத்திற்கு முன்பாகவே டைரக்டர் அகமது உடன் இணைந்து ஜனகணமன என்னும் படத்தில் இணைந்தார் ஆனால் இந்த படம் பாதி எடுக்கப்படாமல் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ தீபாவளி ரேஸில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவியின் படங்கள் ஓடுவது உறுதி ஆனால் இந்த ரேஸில் கலந்து கொண்ட ஏதேனும் ஒரு படம் நழுவ வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.