தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணிகள் இணையும் போது அந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமையும். அந்த வகையில் நடிகர் சிம்பு, கௌதம் மேனனுடன் இணையும் திரைப்படங்கள் எப்பொழுதுமே நல்லதொரு வெற்றியை பெற்று உள்ளது இதனால் அவர்கள் தனது கேரியரில் சிறந்த படத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன அதிலும் குறிப்பாக இந்த இரண்டு படத்திலும் உள்ள பாடல்கள் அனைத்து மக்களையும் கவர்ந்து இழுத்தது அந்த பாடல்கள் தான் வெற்றிக்கு பலம் சேர்ப்பதும் கூட..
கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இளையராஜா போன்ற பலரையும் இசையமைக்க வைத்தாலும் இவரது படத்திற்கான பாடல் எப்பொழுதும் சிறப்பாக இருந்து வந்துள்ளன. சமீபகாலமாக இயக்குனர் கௌதம் மேனன் ஆர் ரகுமான் அவர்களையே தேர்வு செய்து வருகிறார். இப்ப கூட ஏ ஆர் ரகுமான் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இதனால் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஆர் ரகுமான், கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு ஆகியோர் கூட்டணி இதுவரை வெற்றி கூட்டணியாக இருந்து வந்துள்ளன அது போல இந்த படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ ஆர் ரகுமான் பாடல்கள் என்றாலே எப்பொழுதும் சோனி நிறுவனம் வாங்கி விடுவோம் ஆனால் இந்த தடவை சோனி நிறுவனத்தை ஓவர்டேக் செய்து தீம் மியூசிக் நிறுவனம் இசை உரிமையை கைப்பற்றி உள்ளது.