தல அஜித் குண்டாக இருப்பது பற்றி முக்கிய பிரபலம் கூறிய தகவல்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.

thala-ajith
thala-ajith

தனது சினிமா பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்தவர் தான் தல அஜித் சினிமாவையும் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்வார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் துப்பாக்கி சுடுதல்,கார் ரேஸ்,பைக் ரேஸ் போன்ற பல விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பவர்.

கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் இருந்து எந்த திரைப்படங்களும் வெளியாகாமல் இருக்கிறது இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்திருப்போம் அதனை தொடர்ந்து இவர் வலிமை என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மட்டும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக நாங்க வேற மாதிரி என்ற பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து வருகிறது மேலும் தல அஜித்தின் சினிமா பயணத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் குண்டாக நடித்திருந்தால் அடுத்த திரைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக நடித்து விடுவார் அந்த அளவிற்கு தனது உடல் எடையை ஏற்றி குறைத்து நடித்து வருகிறார்.

அதேபோல் வலிமை திரைப்படத்திலும் இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடித்திருப்பார் எனவும் தகவல் கிடைத்துள்ளது எதற்காக தல அஜித்திற்கு உடல் எடை உடனே ஏறி விடுகிறது என்பது பற்றி வாரணம் ஆயிரம்,அவள் வருவாளா போன்ற திரைப்படங்களில் நடித்த பிரித்திவிராஜ் இவரைப்பற்றி கூறியதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ajith
ajith

அதில் தல அஜித்தின் முதுகில் நிறைய ஆப்ரேஷன் செய்ததாகவும் அதனால் அவரால் ரொம்ப அளவிற்கு உடற்பயிற்சி செய்ய முடியாது எனவும் இவர் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் எப்படி நடித்தாலும் எங்களுக்குப் போதும் அவரது திரைப்படங்களை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் அதுதான் எங்களது ஆசை என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.