சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வேறு வழியில் காசு சம்பாதிக்கும் டாப் நடிகைகள்.! யார் யார் தெரியுமா.?

trisha-
trisha-

சினிமா உலகில் நடிகர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு கிடைப்பதில்லை அது முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி. இதனால் தற்பொழுது நடிகைகள் மற்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பட வாய்ப்பு கிடைத்தால் படங்களில் நடிப்பது அப்படி இல்லை என்றால் வேறு வழியில் சம்பாதிப்பதற்கான வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகள் சினிமாவையும் தாண்டி வேறு தொழிலில் காசு பார்த்து வருகின்றனர் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். 90 கால கட்டங்களில் இருந்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி மேல் வெற்றியை ருசித்தாலும்..

மறுபக்கம் வேறு தொழில் செய்து வருகிறார் அந்த வகையில் பெங்களூரில் ஹோட்டல் ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். நல்ல வருமானம் வருகிறதாம். இடுப்பழகி சிம்ரனும் தற்பொழுது படங்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் ஈசிஆரில் Godka by simran என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறார்.

மேலும் கார்த்தியின் சகுனி படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை ப்ரணிதா பெங்களூருவில் பூட்லெக்கர் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்கள் ஹோட்டல் தொழில் செய்கின்றனர் வேறு சில நடிகைகள் வேறு வேலைகளின் மூலம் காசு பார்க்கின்றனர்.

அது குறித்தும் பார்ப்போம் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் இவனுடன் கைகோர்த்து ரவுடி பேபி என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் காசு பார்த்து வருகிறார். மேலும் துபாயில் தனது நண்பர்களின் உதவியின் மூலம் பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்து உள்ளார். இவரைப் போன்று மற்றவர்களும் மற்ற சில பிசினஸ் செய்து ஓடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது