தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து திரையுலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை ஒரு சில நடிகர்கள் கைப்பற்றியுள்ளனர் அந்த வரிசையில் தற்போது ஒருவராக உள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் ஆரம்பித்து தற்போதுவரையிலும் கமர்சியல் போன்ற ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் குடும்பங்களை கவரும்படி இருப்பதால் வசூலில் நல்ல லாபத்தை தருகின்றன.
இவரது நடிப்பில் தற்போது டாக்டர்,டான் மற்றும் ஒரு சில படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. இந்த நிலையில் இவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் பலரும் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு முன்னேறி சிறப்பாக வலம் வருகின்றனர். இப்படி இருக்க ஒரு நடிகை மட்டும் ஏண்டா இவன் படத்தில் நடித்தோம் என புலம்பி உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்து பின்னி பெடலெடுத்து இருந்தார்.இந்த திரைப்படம் வெளிவந்து குடும்பங்களை வெகுவாக கவர்ந்து நீண்ட நாட்கள் ஓடிய படமாகவும் பார்க்கப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
அதன்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோல்களே பெரும்பாலும் வருவதால் செம அப்செட்டில் இருக்கிறாராம் சமீபத்தில் கூட நானி நடிப்பில் வெளியான ஒரு படத்தில் நடித்தார்.அதன்பிறகு தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் உள்ள தங்கையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் இப்படி தொடர்ந்து தங்கை கதாபாத்திரங்கள் வருவதால் இனி ஹீரோயினாக தலைகாட்ட முடியாதா.. என்ற ஏக்கம் அவர்மனதில் வந்து விட்டதாம்.