வயது வெறும் நம்பர் தான் என நிரூபித்து காண்பித்த டாப் நடிகர்கள்.. 55 வயதை கடந்த பிறகும் கோடிகளை குவிக்கும் படங்கள்

super star
super star

Super star actors: இந்திய திரைவுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் நடிகர்கள் தங்களது 55 வயதை கடந்த பிறகும் சினிமாவில் கொஞ்சம் கூட மார்க்கெட் குறையாமல் வசூல் சாதனை படைத்து வருகின்றனர் அப்படி இருக்கும் 5 சூப்பர் ஸ்டார் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி: தெலுங்கு திரைவுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு திரைவுலகில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இவருக்கு 68 வயதை கடந்திருக்கும் நிலையில் 1978ஆம் ஆண்டு முதல் இன்றளவும் நடித்து வரும் இவருடைய படங்கள் கோடிகளை வசூல் செய்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் மோகன்லால்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 63 வயது நிறைவடைந்திருக்கும் நிலையில் இவர் 1960ஆம் ஆண்டு பிறந்தார். மலையாள மட்டுமல்லாமல் இந்தியா சினிமாவில் பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகராக கலக்கி வருகிறார் இவருடைய படங்களும் கோடிகளை வசூல் செய்து வருகிறது.

ஷாருக் கான்: பாலிவுட்டில் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு 57 வயது கடந்திருக்கும் நிலையில் தனது சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து சினிமாவில் உயர்ந்துள்ளார். இவருடைய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Kamal Haasan: உலக நாயகன் கமலஹாசன் என்ற மகுடம் சூட்டியை இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இன்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது 72 வயதிலும்  சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கி வருகிறார். அப்படி ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறார். 50 ஆண்டு காலங்களாக தமிழ் திரைவுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் இவர் இதுவரையிலும் 169 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.