80,90 காலகட்டங்களில் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் ரஜினி, விஜயகாந்த், கமல் இவர்கள் வளர்ச்சி அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களுக்கு இணை மற்ற நடிகர்கள் இல்லை என சொல்லி வந்தனர் ஆனால் அந்த சமயத்தில் தான் நடிகர் ராமராஜன் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் எம்ஜிஆரை போலவே கிராமத்து கதைகளை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை காட்டினார் அது மக்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது அதனால் வெற்றி மேல் வெற்றி கண்டார். இதனால் மூளை முடுக்கு எங்கும் ராமராஜன் பெயர் பேசப்பட்டது அதன் காரணமாக ரஜினி கமல் விஜயகாந்த்துக்கு நிகராக ராமராஜன் பெயரும் நிலைத்து நின்றது.
இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது மேலும் ராமராஜன் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் குறிப்பாக அவரது வில்லுப்பாட்டுக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதனால் அப்பொழுது ரஜினி கமலுக்கு நிகராக ராமராஜன் வந்து விட்டார்.
என பத்திரிகைகளிலும் செய்திகளிலும் வெளியாகின. மேலும் ராமராஜனின் படங்களை பார்த்து ரஜினியும் கமலும் பயந்த காலங்கள் உண்டு. மேலும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோவாக ராமராஜன் இருந்தார் ராமராஜனின் வளர்ச்சி உச்சத்தில் போய்க்கொண்டே இருந்தது இதை அறிந்த ஒருவர் ரஜினிகாந்திடம் வந்து சொல்ல..
ரஜினியோ மிக பொறுமையாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மார்க்கெட் அதிகரிக்க தான் செய்யும் இதில் நாம் எதுவும் தலையிட முடியாது என கூறினாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.