தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன ஆனால் கடந்த வருடம் மட்டும் கொரோனா தொற்று காரணமாக பல திரைப்படங்கள் எடுக்காமலும், எடுக்கப்பட்ட திரைப்படத்தின் சூட்டிங் பதிலையும் நிறுத்தப்பட்டுதன.
சமீப கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் தற்போது நிறுத்தப்பட்டிருந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அப்படி பல முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு படுகிறது.
அஜித்தின் வலிமை, தனுஷின் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம், கார்த்தியின் சுல்தான், விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயன் டாகடர் ஆகிய படங்கள் பாதியில் இருந்த நிலையில் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
ஒரு சில படங்கள் முடிவடைந்துள்ளன ஒரு சில படங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன அப்படி பார்க்கும்போது ஏப்ரலில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சிவகர்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்கள் தான் ஏப்ரல் மாதத்தில் மோதிக்கொள்ளும் என்று பார்த்தால் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது.
அப்படி பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் இந்த மூன்று திரைப்படங்களும் மோத உள்ளன.
திரையரங்குகள் தற்பொழுது 100% இருக்கைகள் கொடுத்துள்ளதால் 3 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் ஆனால் எந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க போவது என்பது தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.