திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஜெயிப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மக்கள் மத்தியில் தற்போது பேமஸான ஒரு நபராக பார்க்கப்படுகிறார். முதலில் இவர் ஜெயம் ரவி, சம்யுக்தா, யோகி பாபு, காஜல் அகர்வால் போன்ற டாப் நடிகர் நடிகைகளை வைத்து கோமாளி என்னும் படத்தை எடுத்தார்.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது பல விருதுகளை வாங்கியது அப்படி ஒரு மேடையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நான் இப்பொழுது இயக்குனருக்காக இந்த விருதை வாங்குகிறேன் அடுத்த தடவை ஒரு ஹீரோவாக வாங்குவேன் என அவர் சொன்னார் அப்பொழுது அதை பலரும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும்..
அவர் சொன்னபடி சிறு இடைவெளிக்கு பிறகு லவ் டுடே என்னும் படத்தை இயக்கி நடித்தார் அதுவும் இந்த படத்தில் ஹீரோவாக செம சூப்பராக நடித்தார் படம் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இந்த காலகட்டத்திற்கு தேவையான படமாக இருந்ததால் படம் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புள்ளாக ஓடின. அதனால் வசூலிலும் பட்டையை கிளப்பியது.
இதுவரை 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதீப் ரங்கநாதன் இதுவரை இயக்கிய கோமாளி லவ் டுடே ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் தற்பொழுது டாப் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதனிடம் கதை கேட்க இருக்கிறார்களாம்.
ஆனால் தளபதி விஜய்யோ அவரை ஏற்கனவே சந்தித்து கதை கேட்டிருக்கிறார் அந்த கதையும் அவருக்கு ரொம்ப பிடித்து போய் இருக்கிறதாம். ஆனால் உறுதியான பதில் இன்னும் விஜய் சைடுல இருந்து வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் விஜய்க்கு சொன்ன கதை ஒரு சயின்ஸ் எக்ஸிபிஷன் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.