லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை ருசித்தது அதன் பின் தனது காதலனுடன் கைகோர்த்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனையடுத்து நயன்தாராவை வைத்து ஏற்கனவே மாயா என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் மீண்டும் ஒரு திரில்லர் கதையை சொல்லி ஒப்பந்தமாகி உள்ளார் அந்த படத்திற்கு கனெக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. இப்போ இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் டாப் நடிகர் சத்யராஜை இணைந்துள்ளது.
படக்குழு அவருக்கு இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம் இந்த நிலையில் நடிகர் சத்யராஜை வரவேற்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. நயன்தாரா சும்மாவே படத்தின் கதைக்கு ஏற்றவாறு பின்னி பெடல் எடுப்பார் தற்போது அவர் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சத்யராஜ் கூட இணைந்து உள்ளதால்..
தற்போது படம் விறுவிறுப்பாக இருப்பதோடு திரில்லர் சம்பவங்கள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என பேசப்பட்டு வருகிறது மேலும் இயக்குனரும் இது போன்ற ஒரு டாப் நடிகருடன் இணைந்து பணியாற்றவே ஆசைப்பட்டேன் எனவும் அவர் வெளிப்படையாக கூறியதை அடுத்து இந்தப் படம் வேற லெவல் இருக்கும் என தெரியவந்துள்ளது.