நடிகர் சிலம்பரசன் குழந்தையாக இருக்கும்போதே தனது அப்பாவுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்து கொண்டு ஹீரோவாக மாற்றி தொடர்ந்து வெற்றி நடை போட்டார்.
ஆரம்பத்தில் பேரும், புகழும் சம்பாதித்து ஓடிக்கொண்டிருந்த சிலம்பரசன் ஒரு கட்டத்தில் சில நடிகைகளுடன் காதலில் வயப்பட்டு பின் அதில் தோற்றுப் போனதால் பல படங்களை தவற விட்ட்தோடு சரியான முறையில் படங்களை நடிக்கவும் செல்லாததால் சினிமா உலகில் இவருக்கு கெட்ட பெயர் அமைந்தது.
அதை உடைத்தெறிய சமீபகாலமாக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு தற்பொழுது சிறப்பான படங்களை கொடுக்க ஆயத்தமாக உள்ளார். அந்தவகையில் ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாநாடு, பத்து தல போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் தற்போது சிம்புவை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் சிம்பு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் ஒரு படத்துக்காக தற்போது 10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் காரணம் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குவிந்து வருவதே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிஉள்ளது நடிகர் சிம்பு ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் அப்படி பார்க்கையில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சினிமா துறையில் இருந்து இந்த தகவல் கசிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.