நடிகர் விஜய் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் இப்பொழுது கூட நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக துவங்கிய சிறப்பாக முடிந்தது.
பீஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து இருந்தாலும் டப்பிங் பணிகளில் இருந்து வருகின்றன. அதனை வெற்றிகரமாக முடித்து விட்டு விஜய் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்பாக பீஸ்ட் படத்திலிருந்து பல்வேறு அப்டேட்டுகள் கசிந்த வண்ணமே இருந்தனர் மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்க்கும் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், இயக்குனர் செல்வராகவன் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியது.
மேலும் அந்த போஸ்டரில் விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டு உள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருப்பதோடு இந்த புகைப்படத்தை பார்த்த கொண்டாடி வருகின்றனர்.
இது இப்படியிருக்க அடுத்த வருடம் இதே ஏப்ரல் மாதத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தை எதிர்த்து அதே நாளில் கேஜிஎப் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்கள் மோதுவதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.