Top 6 Richest Actresses : தென்னிந்திய சினிமாவில் ரூபாய் 165 கோடி உடன் பணக்காரன் நடிகையாக இருந்து வரும் பிரபல நடிகை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவாக தான் சம்பளம் தரப்படுகிறது அப்படி ஹீரோக்கள் அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் மிகவும் குறைவுதான்.
அந்த வகையில் ஒரு படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் ரூபாய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அந்த நடிகை ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை மட்டும் தான் வாங்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தென்னிந்த சினிமாவின் பணக்கார நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் கலக்கி வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த நிலையில் முதன்முறையாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்க்கு அறிமுகமாகி இருக்கிறார். இவர் ஒரு படத்திற்காக ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார். மேலும் ரியல் எஸ்டேட் போன்ற சில தொழில்களையும் செய்து வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 165 கோடியாம். அந்த வகையில் இவர் தான் தென்னிந்திய சினிமாவின் பணக்காரன் நடிகையாக கருதப்படுகிறார்.
தமன்னா: பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் படுக்கையறை, கவர்ச்சி போன்ற காட்சிகளில் அதிகம் நடித்து வரும் தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி வெப் தொடர் என மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அனுஷ்கா ஷெட்டி: பாகுபலி, பாகுபலி 2 படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ரூபாய் 100 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
சமந்தா: நடிகை சமந்தா ரூபாய் 89 கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்து இருக்கும் நிலையில் சமீப காலங்களாக மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இதனால் இவருக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பூஜா ஹெக்டே: பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் பூஜா ஹெக்டே ரூபாய் 50 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் இவர் படங்களில் மட்டுமல்லாமல் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா: இளைஞர்களின் ஃக்ரஷாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா ரூபாய் 28 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தினை பிடித்திருக்கிறார்.