Tamil Villain Actors: ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வில்லனாக நடிப்பவர்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சமீப காலங்களாக ஹீரோவாக நடித்து வந்த ஏராளமான பிரபலங்கள் வில்லனாக அறிமுகமாகி மிரட்டி வருகின்றனர்.
இவ்வாறு வில்லனாக நடிப்பதன் மூலம் பல மொழி திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். குறிப்பாக தமிழில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. அதேபோல் விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவின் கேரக்டரும் பேசப்பட்டது.
இவ்வாறு 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களில் ஹீரோக்களையே ஓவர் டேக் செய்து நடிப்பில் பின்னி பெடலெடுத்த டாப் 3 வில்லன் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வில்லனாக பகத் பாஸில் நடிக்க இவருடைய கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
போஸ்டர்கள் மற்றும் டீசர், டிரைலரை பார்க்கும்பொழுது இவர்தான் இப்படத்தின் ஹீரோவாக இருப்பாரோ என எதிர்பார்க்கப்பட்டது அந்த அளவிற்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரள வைத்தார்.
ஜெயிலர்: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தில் ரகுவரன் நடித்த மார்க் ஆண்டனி கேரக்டர் பெரிதளவிலும் பேசப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்த வர்மன் கேரக்டர் தான். இப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி எதிர்பாராத வெற்றியை பெற்றது. குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இப்படம் வெளியாகும் வரையிலும் விஷால் படம் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரிலீசுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பு பெரிதளவிலும் பேசப்பட்டது.