2022 தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் இந்த வருடத்தில் ஏகப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் வலிமை, பீஸ்ட், பொன்னியின் செல்வன், சர்தார், திருச்சிற்றம்பலம், விக்ரம் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே மிக பிரம்மாண்டமான வசூலை பதிவு செய்தது.
அந்த வகையில் விக்ரம் 410, கோடி பொன்னியின் செல்வன் 500 கோடிக்கு மேல்.. இரண்டு திரைப்படங்கள் தான் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்தது அதேபோல நல்ல விமர்சனத்தை திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்கள் வாங்கின. இதே போல இந்த வருடத்தில் வெளியான பாடல்களும் மக்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கின்றன.
அந்த வகையில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த 5 பாடல்கள் என்னென்ன என்பது குறித்து தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. 1. விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட்.. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபி கூத்து பாடல் வெளிவருவதற்கு முன்பாகவே பெரிய அளவில் வைரலானது.
இந்த பாடல் இப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தெரிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் இளசுகள் மத்தியில் இன்றும் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது.
3. தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் காதல், நட்பு என அனைத்தையும் எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மேகம் கருகாதா பாடல் இளசுகள் மத்தியில் நம்பர் ஒன் பாடலாக இருந்து வருகிறது.
4. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றுள்ள தாய் கிழவி பாடல்.. 5. மீண்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள தேன்மொழி பாடல்.. இந்த 5 பாடல்கள் தான் ரசிகர்களுக்கும் சரி மக்களுக்கும் சரி இந்த ஆண்டில் ரொம்பவும் பிடித்த பாடலாக இருந்துள்ளது.