2022 ல் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் ஐந்து பாடல்கள்.! ஒவ்வொன்னும் வேற ரகம்…

songas
songas

பொதுவாக வெளியாகும் திரைப்படங்களில் கதை முக்கியமாக இருக்கிறதோ இல்லையோ அதில் கண்டிப்பாக படங்களில்  பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்  அப்படி படங்களில் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ பாடலின் மூலம் பல படங்கள் ஹிட் அடித்தது உண்டு. அப்படி 2022 ல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஐந்து பாடல்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

காத்து வாக்குல ரெண்டு காதல் :- இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள டிபம் டப்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. மேலும் இந்த பாடல் வெளியாகி ஏழு மாதம் ஆறு நாட்களில் 90m பார்வையாளர்களை கடந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

விக்ரம்:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “பத்தல பத்தல” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி ஆறு மாதம் 15 நாட்களில் 100m பார்வையாளர்களைக் கடந்து நான்காவது இடத்தில் உள்ளது.

புஷ்பா:- அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தான நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஓ சொல்றியா மாமா” பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதற்கு முக்கிய காரணம் சமந்தாவின் நடனமும் ஆண்ட்ரியாவின் குரலும் தான் என கூறப்படுகிறது. மேலும் இந்தப் பாடல் வெளியாகி 10 மாதத்தில் 19 நாட்களில் 107m பார்வையாளர்களைக் கடந்த மூன்றாவது இடத்தில் உள்ளது.

தி வாரியர் :- இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினி, கீர்த்தி செட்டி நடிப்பில் வெளியான ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படம் தி வாரியார். இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள “புல்லட்” பாடலுக்காகவே இந்த படம் ஓடியது. அப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இந்த படம் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தில் அமைந்துள்ள புல்லட் பாடல் வெளியாகி ஏழு மாதத்தில் நான்கு நாட்களில் 111m பார்வையாளர்களைக் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பீஸ்ட் :- இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது அந்த வகையில் இந்த படத்தில் அமைந்துள்ள “அரபிக் குத்து” பாடல் வெளியாகி ஆறு மாதத்தில் 17 நாட்களில் 335m பார்வையாளர்களைக் கடந்து முதலிடத்தை பிடித்துள்ளது.