Top 5 Movies 2023: கொரோனா பிரச்சனைக்கு பிறகு தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பல கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அப்படி இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்து பார்க்கலாம்.
துணிவு: ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் பேங்கில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அஜித்தின் லுக் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் சொதப்பப்பட்டாலும் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
வாரிசு: பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து விஜய் வாரிசு படத்தில் நடித்தார். இப்படம் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படத்துடன் மோதியது இதில் வாரிசு ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்றவர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் கிளைமாக்ஸ் கலவை விமர்சனத்தை பெற்றதால் ரூ.300 கோடிக்கு குறைவான வசூல் செய்தது.
ரூ.100 கோடி டார்கெட் வைத்து அடிக்கும் நயன்தாரா.! விக்கிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல..
ஜெயிலர்: ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜாக்கி ஷராப், யோகி பாபு போன்றவர்களின் கூட்டணியில் வெளியான ஜெயிலர் காமெடி மற்றும் ஆக்சன் படமாக உருவானது. இப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் ரூபாய் 525 கோடி வரை வசூல் செய்து ரஜினியின் இண்டஸ்ட்ரியில் ஹிட் படமாக அமைந்தது.
லியோ: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சோலோவாக ரிலீஸ் ஆனது. இப்படம் ரூ. 540 கோடி வரை வசூல் எட்டியது.
மொட்டை ராஜேந்திரன் மொட்டைக்கு பின் இப்படி ஒரு சோக கதையா.! இதையும் தலைவன் சிரிச்சுக்கிட்டே சொல்றாரே..
இவ்வாறு தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரூ.200 கோடி வசூலை தாண்டி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கல்லாகட்டி உள்ளது. இந்த படங்கள் மட்டுமல்லாமல் தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் மாவீரன், உதயநிதியின் மாமன்னன், அசோக் செல்வனின் போர் தொழில், விஷாலின் மார்க் ஆண்டனி போன்ற படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.