தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்களை கொடுத்தாலும் அந்த படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படவில்லை ஆனால் டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்தாலும்..
அந்தப் படம் மக்கள் மத்தியில் நின்று பேசும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். மேலும் சினிமா வட்டாரங்களே அந்த படத்தை பற்றி பேசும் அளவிற்கு வசூல் ரீதியாக சிறந்து விளங்கும் அந்த வகையில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
1. பீஸ்ட் : தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் 250 கோடிக்கு மேல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. 2. வலிமை : அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம் மக்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்ததையடுத்து படம் மொத்தமாக உலக அளவில் 234 கோடிக்கு மேல் வசூல் செய்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. எதற்கும் துணிந்தவன் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் ஒரு சமூக அக்கறை உள்ள படமாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து இந்த படம் உலக அளவில் மொத்தமாக 179 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
4. டான் : சிவகார்த்திகேயன் நடிப்பில் இளம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் அனைத்து விதமான மக்களையும் கவர்ந்து அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிலையில் டான் திரைப்படம் 120 கோடி வசூலை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. 5.காத்துவாக்குல ரெண்டு காதல் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் காதல் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்து இருந்ததால் இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து படம் 66 கோடி வசூல் செய்துள்ளது.