கர்நாடகாவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள்.! அஜித், விஜய்க்கு இடமில்லை

Rajini
Rajini

தமிழ் சினிமாவில் வெளியாகின்ற டாப் ஹீரோக்களின் படங்கள்  தமிழை தாண்டி வெளிநாடு, மற்ற மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்துகின்றன அந்த வகையில் கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பற்றி பார்ப்போம்..

2.0 : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் 2.0 படம் முழுக்க முழுக்க சமூக அக்கறை கலந்த ஒரு ஆக்சன் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது ஒட்டுமொத்தமாக 2.0 திரைப்படம் 750 கோடி வசூல் அள்ளி உள்ளது. கர்நாடகாவில் மட்டும் சுமார் 52.8 கோடி வசூல் செய்தது ஷேர் 25 கோடி கிடைத்தது.

வீட்டுக்கு வந்து செழியனை வான் பண்ணிய மாலினி.. பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

கபாலி : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி இருந்தாலும் கொஞ்சம் எமோஷனல் போன்றவை இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது ஓட்டு மொத்தமாக இந்த திரைப்படம் 315 கோடி கலெக்ஷன் செய்தது. கர்நாடகாவில் மட்டும் 34.5 கோடி வசூல் செய்தது ஷேர் மட்டும் 14.5 கோடி கிடைத்தது.

பொன்னியின் செல்வன் பார்ட் 1 : இதுவரை மக்கள் கதையாக படித்து வந்ததை படமாக மணிரத்தினம் உருவாக்கினார் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார்.  முதல் பாகம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. கர்நாடகாவில் மட்டும் 28.3 கோடி வசூல் செய்தது சுமார் 15.2 கோடி கிடைத்ததாம்.

படுக்கையை பகிர மறுத்த நடிகை.? படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவம்.! ஓஹோ காரணம் இயக்குனரின் உறவினரா.?

விக்ரம் :  லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருள் கும்பலை ஒழிக்க வேண்டும் தனது பேரப்புள்ளையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் படத்தின் கதை படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது ஒட்டுமொத்தமாக 440 கோடி மேல் வசூல் செய்தது கர்நாடகாவில் மட்டும் 26.3 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் 2 : பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில மாதங்களிலேயே இந்த படமும் ரிலீஸ் ஆனது படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 345 கோடிக்கு மேல் வசூல் செய்தது கர்நாடகாவில் மட்டும் 20.9 கோடி வசூல் செய்தது.