2022 இல் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வி அடைந்துள்ளன. அதேசமயம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படம் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் வசூலித்தது என்னவோ ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கன்னட சினிமாவில் இருந்து வெளிவந்த திரைப்படம் கே ஜி எஃப் 2. பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படமும் எடுக்கப்பட்டது.
ஆனால் RRR படத்தை காட்டிலும் இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 1,250 கோடி வசூல் செய்து இந்த வருடத்தில் முதல் இடத்தில் இருக்கிறது கேஜிஎப் 2. தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட்.
இந்தப் படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் மிக பிரமாண்ட வசூலை அள்ளியது சொல்லப்போனால் உலக அளவில் 220 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது தமிழகத்தில் மட்டுமே 113 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் அஜித்தின் வலிமை.
இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது தமிழகத்தில் மட்டுமே 98 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது. ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள திரைப்படம் சிவகார்த்திகேயன் டான்.
படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் சரியாக இருந்த காரணத்தினால் இந்த படமும் மக்கள் தொடங்கி ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே 80 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது உலக அளவில் சுமார் 116 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 2022ல் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் இதுதான்.