2023-ல் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. ரஜினிக்கே தண்ணி காட்டிய தளபதி விஜய்..

tamil movie
tamil movie

Tamil Movies: இந்த ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை சந்தித்துள்ளது. தெலுங்கு, கன்னட படங்கள் அனைத்தும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. ஆனால் தமிழ் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை இதுவரையிலும் எட்டவில்லை. இந்த சூழலில் ஓரளவிற்கு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம்.

துணிவு: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் கூட்டணியில் வெளியான துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொக்கன், அமீர்கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் 200 கோடி வரை வசூல் செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கம் கர்ஜித்தா காட்டுக்கு ராஜா.. இல்லனா டம்மி தான்.. டாப் வில்லனாக இருந்து காமெடி பீஸ்ஸான 5 நடிகர்கள்..

வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இப்படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான நிலையில் சுமார் 300 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வாரிசு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூல் செய்தது இதனை அடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட அவர்கள் நடித்திருந்தனர்.

என்னால முடியல.. தூக்க கலக்கத்தில் கூட அதை பண்ண சொல்றார் – புலப்பும் நடிகை மகாலட்சுமி

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜெயிலர் சுமார் 525 கோடி வரை வசூல் செய்வதாகவும் மேலும் மொத்தமாக 607 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது இப்படம் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

லியோ: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் மொத்தமாக 625 கோடி வரை வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் முதல் இடத்தில் பிடித்துள்ளது. இவ்வாறு தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 2000 கோடிக்கு மேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வசூல் செய்துள்ளது.